Tamil Rap Kavithai
Read like Rapமன்மத தேசத்துல
மஞ்சள் வெயில் மாலையில
மயக்கிட்டு போனவள
மறந்திட முடியல
மணந்திட வழி இல்ல
மனசுக்கு புரியல
நெருப்புனு தெரியல
Read like sad melody
என் மனசுக்கு புரியல
நீ நெருப்புனு தெரியல
Again Rap
உயிருக்குள் விதைச்சிட்டேன்
உறனுவு நினைச்சிட்டேன்
உலகத்த மறந்துட்டேன்
ஏத்துக்கிட மறுக்கிற
ஏன்டி என வெறுக்கிற
இருவிழி கடலுல
இளமையை தொலைச்சிட்டேன்
இதயத்தில் இடமில்ல
இருந்தினும் மறந்திட முடியல
தனிமையை தாரமாக்கி
கண்ணின் ஓரம் ஈரமாக்கி
புன்னகை தேசத்துல
ஏழையாக வாழுறண்டி
Read like sad melody
நீ இல்லாத ராத்திரியை
ரதி இழந்த மன்மதனாய்
Again Rap
கஷ்டபட்டு கரைக்கிறேன்
கனவுல நிரப்புறேன்
கவிதைய முடிக்கிறேன்
Annamalai Thangaraj




0 comments:
Post a Comment