நித்திரையில் கண்ட சித்திரங்கள் யாவும்
நினைவினில் சுமந்து செல்கிறேன்
நிஜத்தினில் வாழ துடிக்கிறேன்
உன்னை நினைத்து
நித்தம் நித்தம்
சிந்தைக்குள் சிலை செய்கிறேன்
நீரும் பிடிக்கவில்லை
நிலவும் பிடிக்கவில்லை
நீயின்றி என் நிழலும் பிடிக்கவில்லை
நிஜங்கள் யாவும் பிடிக்கவில்லை
உன் நினைவுகள் போதும் பெண்ணே
என் கனவுகள் போதும் கண்ணே
கற்பனையில் கவிதை சொல்கிறேன்
என் கவிதையில் என் காதல் சொல்கிறேன்
உயிர் காற்று நீங்கிவிடின்
என் கல்லறை என் காதல் சொல்லும்
- Annamalai Thangaraj
நினைவினில் சுமந்து செல்கிறேன்
நிஜத்தினில் வாழ துடிக்கிறேன்
உன்னை நினைத்து
நித்தம் நித்தம்
சிந்தைக்குள் சிலை செய்கிறேன்
நீரும் பிடிக்கவில்லை
நிலவும் பிடிக்கவில்லை
நீயின்றி என் நிழலும் பிடிக்கவில்லை
நிஜங்கள் யாவும் பிடிக்கவில்லை
உன் நினைவுகள் போதும் பெண்ணே
என் கனவுகள் போதும் கண்ணே
கற்பனையில் கவிதை சொல்கிறேன்
என் கவிதையில் என் காதல் சொல்கிறேன்
உயிர் காற்று நீங்கிவிடின்
என் கல்லறை என் காதல் சொல்லும்
- Annamalai Thangaraj




0 comments:
Post a Comment