TRUST Examination September 2017 - Notification released
தமிழ் நாடு ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு - செப்டம்பர் 2017
ஊரகப் பகுதியிலுள்ள (அதாவது கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப்), அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2017-2018ம் கல்வியாண்டில் தொடர்ந்து 9-ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்கள் இத்திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு தகுதி படைத்தவராவார்கள்.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற திறமை மிக்க மாணவ/மாணவியருக்கு தேர்வு முடிவின் தகுதி அடிப்படையில் 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்கான படிப்புதவித் தொகையாக ஆண்டுதோறும் ரூ.1000/- வீதம் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவியருக்கு (மொத்தம் 100 பேர்) வருவாய் மாவட்டம் தோறும் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
இவ்வாணைக்கிணங்க மாணவ/மாணவியரை தேர்ந்தெடுக்க மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் அமைந்த பள்ளிகளைத் தவிர்த்து, தவிர்த்து மாநிலம் முழுவதும் ஊரகப்பகுதியில் அமைந்துள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2017-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 24.09.2017 4.09.2017 4.09.2017(ஞாயிறு) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும் தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பம் செய்வோருக்கான தகுதிகள்
1. அரசு ஆணை (நிலை) எண்.960, கல்வி (இ2) துறை, நாள் 11.10.91ன் படி ஊரகப் பகுதிகளில் (அதாவது கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப்), அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2017-2018-ம் கல்வியாண்டில் தொடர்ந்து 9-ம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவியர் இத்திறனாய்வுத் தேர்வு திட்டத்திற்கு தகுதி படைத்தவராவார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் வருவாய்த் துறையிலிருந்து பெற்றோரின் வருமானச் சான்று பெற்று அளித்தல் வேண்டும்.
நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ/மாணவிகள் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ/மாணவிகள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கக் கூடாது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கக் கூடாது.
தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள் தேர்வுக்கான கட்டணம் ரூ.5/- சேவைக் கட்டணம் ரூ.5/- சேர்த்து ரூ.10/- ஐ பள்ளித் தலைமையாசிரியர் மூலமாக பணமாக உரிய முதன்மைக் கல்வி அலுவலரிடம் செலுத்துதல் வேண்டும்.




0 comments:
Post a Comment