மண்ணை நம்பி விதை விதைச்சேன்
மழையை நம்பி நெல்லு வச்சேன்
அடை மழை காலமது
அடைகாத்து நானும் வச்சேன்
அணை கடந்து வெள்ளம் வந்து
அடிச்சிப்போனது எந்தன் உயிரு
அடுத்து வந்த கோடையில்
கலங்காது நானும் கரும்பு வச்சேன்
அக்னி வெயிலே வேலையிலே
அடைகாத்து நானும் வச்சேன்
பொய்த்து போனது மேகம்
வெந்து தீர்த்தது எந்தன் தேகம்
வேதனையில் கண்ணு குளமாச்சி
வேர்வை உரமாச்சி
கருணையற்ற வெய்யிலே
கருகிப்போனது எந்தன் உயிரு
வருத்தம் மறந்து வாழை வச்சேன்
வாழை வளரும் வேலையிலே
புயல் காத்து ஒன்னு
கடந்துபோனது எந்தன் தோட்டம்
உடைந்து போனது எந்தன் உயிரு
வச்ச நெல்லு வீடு சேரல
விதை நெல்லுகூட மீரல
நீதி கேட்டு வீதி வந்தேன்
நட்டது மூணு போகம்
நட்டஈடு நாலு ரூவா
நாதியற்று வீதியிலே
நானும் செத்தேன்
கடைசி பக்க சேதியிலே
Annamalai Thangaraj
மழையை நம்பி நெல்லு வச்சேன்
அடை மழை காலமது
அடைகாத்து நானும் வச்சேன்
அணை கடந்து வெள்ளம் வந்து
அடிச்சிப்போனது எந்தன் உயிரு
அடுத்து வந்த கோடையில்
கலங்காது நானும் கரும்பு வச்சேன்
அக்னி வெயிலே வேலையிலே
அடைகாத்து நானும் வச்சேன்
பொய்த்து போனது மேகம்
வெந்து தீர்த்தது எந்தன் தேகம்
வேதனையில் கண்ணு குளமாச்சி
வேர்வை உரமாச்சி
கருணையற்ற வெய்யிலே
கருகிப்போனது எந்தன் உயிரு
வருத்தம் மறந்து வாழை வச்சேன்
வாழை வளரும் வேலையிலே
புயல் காத்து ஒன்னு
கடந்துபோனது எந்தன் தோட்டம்
உடைந்து போனது எந்தன் உயிரு
வச்ச நெல்லு வீடு சேரல
விதை நெல்லுகூட மீரல
நீதி கேட்டு வீதி வந்தேன்
நட்டது மூணு போகம்
நட்டஈடு நாலு ரூவா
நாதியற்று வீதியிலே
நானும் செத்தேன்
கடைசி பக்க சேதியிலே
Annamalai Thangaraj




0 comments:
Post a Comment