அதிகாரம் : நடுவு நிலைமை
Adhigaram: Natuvu Nilaimai
Chapter: Impartiality
இயல்: இல்லறவியல்
Iyal: Illaraviyal
Chapter Group: Domestic Virtue
பால்: அறத்துப்பால்
Paal: Araththuppaal
Section: Virtue
Adhigaram: Natuvu Nilaimai
Chapter: Impartiality
இயல்: இல்லறவியல்
Iyal: Illaraviyal
Chapter Group: Domestic Virtue
பால்: அறத்துப்பால்
Paal: Araththuppaal
Section: Virtue
குறள்/Couplet | Link |
| தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். If justice, failing not, its quality maintain, Giving to each his due, -'tis man's one highest gain | 111 |
| செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து. The just man's wealth unwasting shall endure, And to his race a lasting joy ensure | 112 |
| நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல். Though only good it seem to give, yet gain By wrong acquired, not e'en one day retain | 113 |
| தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும். Who just or unjust lived shall soon appear: By each one's offspring shall the truth be clear | 114 |
| கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி. The gain and loss in life are not mere accident; Just mind inflexible is sages' ornament | 115 |
| கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின். If, right deserting, heart to evil turn, Let man impending ruin's sign discern | 116 |
| கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. The man who justly lives, tenacious of the right, In low estate is never low to wise man's sight | 117 |
| சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. To stand, like balance-rod that level hangs and rightly weighs, With calm unbiassed equity of soul, is sages' praise | 118 |
| சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். Inflexibility in word is righteousness, If men inflexibility of soul possess | 119 |
| வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். As thriving trader is the trader known, Who guards another's interests as his own | 120 |




0 comments:
Post a Comment