We are moved to new domain
Click -> www.ehowtonow.com
Sunday, 28 May 2017

Thirukural - Nenjotupulaththal - Kural 1293

அதிகாரம் : நெஞ்சொடு புலத்தல்
Adhigaram: Nenjotupulaththal
Chapter:  Expostulation with Oneself

இயல்: கற்பியல்
Iyal:  Karpiyal
Chapter Group: The Post-marital love

பால்: காமத்துப்பால்
Paal: Kamathupaal
Section: Love

குறள் 1293:
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.

விளக்கம் : நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?

Couplet 1293:
'The ruined have no friends, 'they say; and so, my heart, To follow him, at thy desire, from me thou dost depart

Explanation : O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?

Transliteration : Kettaarkku Nattaaril Enpadho NenjeneePettaangu Avarpin Selal

கலைஞர் உரை:
நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?.

மு.வரதராசனார் உரை:
நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?.

சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ?.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; நீ பெட்டாங்கு அவர்பின் செலல் - என்மாட்டு நில்லாது நீ விரும்பியவாறே அவர்மாட்டுச் செல்லுதற்குக் காரணம்; கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ? - கெட்டார்க்கு நட்டார் உலகத்து இல்லை என்னும் நினைவோ? நின்னியல்போ? கூறுவாயாக. ('என்னை விட்டு அவர்மாட்டுச் சேறல் நீ பண்டே பயின்றது', என்பாள், 'பெட்டாங்கு' என்றும், தான் இதுபொழுது மானமிலளாகலின், 'கெட்டார்க்கு' என்றும் கூறினாள். 'பின்' என்பது ஈண்டு இடப் பொருட்டு. 'செலல்' என்பது ஆகுபெயர். 'ஒல்கிடத்து உலப்பிலா உணர்விலார் தொடர்பு' (கலித்,பாலை 25)ஆயிற்று, நின் தொடர்பு என்பதாம்.).

மணக்குடவர் உரை:
நெஞ்சே! நீ என்னிடத்து நில்லாது வேண்டின வண்ணமே அவர் பின்பே செல்கின்றது, கெட்டார்க்கு நட்டார் இல்லையென்பதனானேயோ?.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நெஞ்சமே! நீ விரும்பியவாறே அவரிடம் செல்லுவதற்குக் காரணம் கேட்டவர்களுக்கு நட்புற்றவர்கள் உலகத்தில் இல்லை என்கின்ற நினைப்போ?.

Shop and help us

Flipkart Offer Snapdeal offer Amazon.in offer Amazon.com offer
  • Blogger Comments
  • Facebook Comments
  • Disqus Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Thirukural - Nenjotupulaththal - Kural 1293 Rating: 5 Reviewed By: eHowToNow