அதிகாரம் : உழவு
Adhigaram: Uzhavu
Chapter: Farming
இயல்: குடியியல்
Iyal: Kudiyiyal
Chapter Group: Miscellaneous
பால்: பொருட்பால்
Paal: Porutpaal
Section: Wealth
Adhigaram: Uzhavu
Chapter: Farming
இயல்: குடியியல்
Iyal: Kudiyiyal
Chapter Group: Miscellaneous
பால்: பொருட்பால்
Paal: Porutpaal
Section: Wealth
குறள்/Couplet | Link |
| சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. Howe'er they roam, the world must follow still the plougher's team; Though toilsome, culture of the ground as noblest toil esteem | 1031 |
| உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. The ploughers are the linch-pin of the world; they bear Them up who other works perform, too weak its toils to share | 1032 |
| உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். Who ploughing eat their food, they truly live: The rest to others bend subservient, eating what they give | 1033 |
| பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர். O'er many a land they 'll see their monarch reign, Whose fields are shaded by the waving grain | 1034 |
| இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். They nothing ask from others, but to askers give, Who raise with their own hands the food on which they live | 1035 |
| உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை. For those who 've left what all men love no place is found, When they with folded hands remain who till the ground | 1036 |
| தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். Reduce your soil to that dry state, When ounce is quarter-ounce's weight; Without one handful of manure, Abundant crops you thus secure | 1037 |
| ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. To cast manure is better than to plough; Weed well; to guard is more than watering now | 1038 |
| செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். When master from the field aloof hath stood; Then land will sulk, like wife in angry mood | 1039 |
| இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும். The earth, that kindly dame, will laugh to see, Men seated idle pleading poverty | 1040 |




0 comments:
Post a Comment