அதிகாரம் : புணர்ச்சி விதும்பல்
Adhigaram: Punarchchividhumpal
Chapter: Desire for Reunion
இயல்: கற்பியல்
Iyal: Karpiyal
Chapter Group: The Post-marital love
பால்: காமத்துப்பால்
Paal: Kamathupaal
Section: Love
குறள் 1287:
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
விளக்கம் : வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?
Couplet 1287:
As those of rescue sure, who plunge into the stream, So did I anger feign, though it must falsehood seem
Explanation : Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?
Transliteration : Uyththal Arindhu Punalpaai PavarepolPoiththal Arindhen Pulandhu
கலைஞர் உரை:
வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?.
மு.வரதராசனார் உரை:
வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் என்ன?.
சாலமன் பாப்பையா உரை:
தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல - தம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல் போல; பொய்த்தல் அறிந்து புலந்து என்? - புலவி முடிவு போகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவது என்? ('பாய்பவர்' என்பது ஆகுபெயர். பொய்த்தல் - புரைபடுதல், புலந்தாலும் பயனில்லை என்பதாம். 'பொய்த்தல் அறிந்தேன்' என்பது பாடமாயின், 'உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார் முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன், இனி அது செயற்பாற்றன்று என' உரைக்க.).
மணக்குடவர் உரை:
தம்மை ஈர்ப்ப அதனையறிந்து வைத்தும், புனலுள் பாய்பவரைப் போல நெஞ்சு பொய்ப்படுதல் அறிந்து வைத்தும் புலக்கின்றது ஏதுக்கு?. இது புலவிக்குறிப்பு நீங்குவாள் தன்னுள்ளே சொல்லியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தம்மை இழுத்துக் கொண்டு போவதை யறிந்தும் தண்ணீரில் பாய்பவர்போலப் பிணங்குவதில் பயனில்லை என்பதை அறிந்திருந்தும் கணவரோடு பிணங்கிப் பெறுவது என்ன?.

0 comments:
Post a Comment