We are moved to new domain
Click -> www.ehowtonow.com
Sunday, 28 May 2017

Thirukural - Kuripparivuruththal - Kural 1279

அதிகாரம் : குறிப்பறிவுறுத்தல்
Adhigaram: Kuripparivuruththal
Chapter:  The Reading of the Signs

இயல்: கற்பியல்
Iyal:  Karpiyal
Chapter Group: The Post-marital love

பால்: காமத்துப்பால்
Paal: Kamathupaal
Section: Love

குறள் 1279:
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

விளக்கம் : பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்

Couplet 1279:
She viewed her tender arms, she viewed the armlets from them slid; She viewed her feet: all this the lady did

Explanation : She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly)

Transliteration : Thotinokki Mendholum Nokki AtinokkiAqdhaan Tavalsey Thadhu

கலைஞர் உரை:
பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.

மு.வரதராசனார் உரை:
தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது.

பரிமேலழகர் உரை:
(தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது.) (யான் அது தெளிவித்த வழி தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி - அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன் மென்தோள்களையும் நோக்கி; அடி நோக்கி - பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி; ஆண்டு அவள் செய்தது அஃது - அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன் போக்காயிருந்தது. (செய்த குறிப்பு-செய்தற்கு ஏதுவாய குறிப்பு. 'அஃது' என்றாள், 'செறிதொடி செய்திறந்த கள்ளம்' (குறள். 1275)என்றானாகலின். பிரிதற்குறிப்புண்டாயின், அஃது அழுங்குதல் பயன்.).

மணக்குடவர் உரை:
தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி, அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு அதுவாயிருந்தது. அது - உடன்போக்கு.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தன தோள் வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கி, தனது அடிகளையும் நோக்கி, அவ்வாறு அப்போது அவள் செய்தாள். அவள் செய்தது அவ்வளவேயாகும்.

Shop and help us

Flipkart Offer Snapdeal offer Amazon.in offer Amazon.com offer
  • Blogger Comments
  • Facebook Comments
  • Disqus Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Thirukural - Kuripparivuruththal - Kural 1279 Rating: 5 Reviewed By: eHowToNow