We are moved to new domain
Click -> www.ehowtonow.com
Friday, 19 May 2017

திருக்குறள் - அன்புடைமை - குறள் 75

அதிகாரம் : அன்புடைமை
Adhigaram: Anbudaimai
Chapter:  The Possession of Love

இயல்: இல்லறவியல்
Iyal:  Illaraviyal
Chapter Group: Domestic Virtue

பால்: அறத்துப்பால்
Paal: Araththuppaal
Section: Virtue

குறள் 75:
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

விளக்கம் : உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்

Couplet 75:
Sweetness on earth and rarest bliss above, These are the fruits of tranquil life of love

Explanation : These are the fruits of tranquil life of love

Transliteration : Anputru Amarndha Vazhakkenpa VaiyakaththuInputraar Eydhum Sirappu

கலைஞர் உரை:
உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.

மு.வரதராசனார் உரை:
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை:
இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்.

பரிமேலழகர் உரை:
அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப - அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்; வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு - இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின்பத்தினை. ('வழக்கு' ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டும் இன்புறுவர் ஆகலின் இன்புற்றார் எய்தும் சிறப்பு என்றார்.தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம்.).

மணக்குடவர் உரை:
முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவர்: இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இவ்வுலகில் இல்லறத்தில் இன்பமடைந்து பெறுகின்ற பெருமையினை, அன்பினைப் பெற்றவராகிப் பொருந்திய வழியினாலான பயனேயாகும் என்று அறிந்தோர் கூறுவார்கள்.

Shop and help us

Flipkart Offer Snapdeal offer Amazon.in offer Amazon.com offer
  • Blogger Comments
  • Facebook Comments
  • Disqus Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருக்குறள் - அன்புடைமை - குறள் 75 Rating: 5 Reviewed By: eHowToNow