We are moved to new domain
Click -> www.ehowtonow.com
Wednesday, 3 May 2017

திருக்குறள் - நீத்தார் பெருமை - குறள் 30

அதிகாரம் :  நீத்தார் பெருமை
Adhigaram: Neeththaar Perumai
Chapter: The Greatness of Ascetics

இயல்: பாயிரவியல்
Iyal: Paayiraviyal
Chapter Group: Prologue

பால்: அறத்துப்பால்
Paal: Araththuppaal
Section: Virtue

குறள் 30:
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

விளக்கம் : அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்

Couplet 30: 
Towards all that breathe, with seemly graciousness adorned they live;
And thus to virtue's sons the name of 'Anthanar' men give

Explanation : The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness

Transliteration : Andhanar Enpor Aravormar Revvuyir KkumSendhanmai Poontozhuka Laan

கலைஞர் உரை: 
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

மு.வ உரை: 
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை: 
எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

பரிமேலழகர் உரை:
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.

மணக்குடவர் உரை:
எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

எல்லா உயிர்களிடத்திலும் அருளுடன் நடந்துகொள்ளுவதால் அந்தணர் என்று சொல்லவப்படுபவர் அறவோர்களாகிய முனிவர்களே யாவார்கள்.

Shop and help us

Flipkart Offer Snapdeal offer Amazon.in offer Amazon.com offer
  • Blogger Comments
  • Facebook Comments
  • Disqus Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருக்குறள் - நீத்தார் பெருமை - குறள் 30 Rating: 5 Reviewed By: eHowToNow