We are moved to new domain
Click -> www.ehowtonow.com
Sunday, 28 May 2017

Thirukural - Kaadharsirappuraiththal - Kural 1124

அதிகாரம் : காதற் சிறப்புரைத்தல்
Adhigaram: Kaadharsirappuraiththal
Chapter:  Declaration of Love's special Excellence

இயல்: களவியல்
Iyal:  Kalaviyal
Chapter Group: The Pre-marital love

பால்: காமத்துப்பால்
Paal: Kamathupaal
Section: Love

குறள் 1124:
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

விளக்கம் : ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்

Couplet 1124:
Life is she to my very soul when she draws nigh; Dissevered from the maid with jewels rare, I die

Explanation : My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me

Transliteration : Vaazhdhal Uyirkkannal Aayizhai SaadhalAdharkannal Neengum Itaththu

கலைஞர் உரை:
ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்.

மு.வரதராசனார் உரை:
ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.

சாலமன் பாப்பையா உரை:
என் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு போன்றிருக்கிறாள். அவளைப் பிரியும்போது உயிர் உடம்பை விட்டுப் பிரிவது போன்றிருக்கிறாள்.

பரிமேலழகர் உரை:
(பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது.) ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள் - தெரிந்த இழையினையுடையாள் எனக்குப் புணருமிடத்து உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும், நீங்குமிடத்து அதற்குச் சாதல் அன்னள் - பிரியுமிடத்து, அதற்கு அதனின் நீங்கிப் போதல் போலும்; ('எனக்கு' என்பதும், 'புணருமிடத்து' என்பதும் அவாய் நிலையான் வந்தன. வாழும் காலத்து வேற்றுமையின்றி வழி நிற்றலானும், சாகும் காலத்து வருத்தம் செய்தலானும் அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.).

மணக்குடவர் உரை:
கூடுமிடத்து இவ்வாயிழை உயிர்க்கு வாழ்தலோடு ஒப்பள்: நீங்குமிடத்து அவ்வுயிர்க்குச் சாதலோடு ஒப்பள். இஃது இரண்டாங்கூட்டத்துப் புணர்ந்து நீங்கானென்று கருதிய தலைமகள் கேட்பத் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஆராய்ந்து அணியப் பெற்ற ஆபரணங்களையுடைய பெண், புணரும்போது உயிர் உடம்புடன் கூடிவாழ்த்தல்போல் இருக்கின்றாள். பிரியும் பொது அந்த உயிர் அவ்வுடம்பிலிருந்து விலகிப் போவதுபோல் ஆகிவிடுகின்றாள்.

Shop and help us

Flipkart Offer Snapdeal offer Amazon.in offer Amazon.com offer
  • Blogger Comments
  • Facebook Comments
  • Disqus Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Thirukural - Kaadharsirappuraiththal - Kural 1124 Rating: 5 Reviewed By: eHowToNow