அதிகாரம் : கனவுநிலை உரைத்தல்
Adhigaram: Kanavunilaiyuraiththal
Chapter: The Visions of the Night
இயல்: கற்பியல்
Iyal: Karpiyal
Chapter Group: The Post-marital love
பால்: காமத்துப்பால்
Paal: Kamathupaal
Section: Love
குறள் 1214:
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
விளக்கம் : நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது
Couplet 1214:
Some pleasure I enjoy when him who loves not me In waking hours, the vision searches out and makes me see
Explanation : There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness
Transliteration : Kanavinaan Untaakum Kaamam NanavinaanNalkaarai Naatith Thararku
கலைஞர் உரை:
நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது.
மு.வரதராசனார் உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நனவினான் நல்காரை நாடித்தரற்கு - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை அவர் சென்றுழி நாடிக் கொண்டு வந்து கனவு தருதலான்; கனவினான் காமம் உண்டாகும் - இக் கனவின்கண்ணே எனக்கு இன்பம் உண்டாகா நின்றது. (காமம் - ஆகுபெயர். நான்காவது மூன்றன் பொருண்மைக்கண் வந்தது. 'இயல்பான் நல்காதவரை அவர் சென்ற தேயம் அறிந்து சென்று கொண்டு வந்து தந்து நல்குவித்த கனவால் யான் ஆற்றுவல்' என்பதாம்.).
மணக்குடவர் உரை:
நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால், அக்கனவின் கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும். இது கண்டாற் பயனென்னை? காம நுாகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நனவுக் காலத்தில் வந்து அன்பு காட்டாத எனது தலைவரை அவர் சென்ற இடத்திலிருந்து இங்குக் கொணர்ந்து காட்டுவதால் கனவில் காமமானது உண்டாகின்றது.

0 comments:
Post a Comment