We are moved to new domain
Click -> www.ehowtonow.com
Sunday, 28 May 2017

Thirukural - Nalampunaindhuraiththal - Kural 1111

அதிகாரம் : நலம் புனைந்து உரைத்தல்
Adhigaram: Nalampunaindhuraiththal
Chapter:  The Praise of her Beauty

இயல்: களவியல்
Iyal:  Kalaviyal
Chapter Group: The Pre-marital love

பால்: காமத்துப்பால்
Paal: Kamathupaal
Section: Love

குறள் 1111:
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

விளக்கம் : அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி

Couplet 1111:
O flower of the sensitive plant! than thee More tender's the maiden beloved by me

Explanation : May you flourish, O Anicham! you have a delicate nature But my beloved is more delicate than you

Transliteration : Nanneerai Vaazhi Anichchame NinninumMenneeral Yaamveezh Paval

கலைஞர் உரை:
அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி.

மு.வரதராசனார் உரை:
அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.

சாலமன் பாப்பையா உரை:
அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்!.

பரிமேலழகர் உரை:
[அஃதாவது , தலைமகன் தலைமகள் நலத்தைப் புனைந்து சொல்லியது . இது , புணர்ச்சி மகிழ்ந்துழி நிகழ்வதாகலின் , புணர்ச்சி மகிழ்தலின் பின் வைக்கப்பட்டது .] (இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.) அனிச்சமே வாழி நன்னீரை - அனிச்சப்பூவே, வாழ்வாயாக, மென்மையால் நீ எல்லாப் பூவினும் நல்ல இயற்கையையுடையை; யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள் - அங்ஙனமாயினும் எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மெல்லிய இயற்கையை உடையவள். (அனிச்சம்: ஆகுபெயர், 'வாழி' என்பது உடன்பாட்டுக் குறிப்பு. இனி 'யானே மெல்லியள்' என்னும் தருக்கினை ஒழிவாயாக என்பதாம். அது பொழுது உற்றறிந்தானாகலின், ஊற்றின் இனி்மையையே பாராட்டினான், 'இன்னீரள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை:
அனிச்சப்பூவே! நீ நல்ல நீர்மையை யுடையாய்; எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மிக நீர்மையாள் காண். இஃது உடம்பினது மென்மை கூறிற்று.

Shop and help us

Flipkart Offer Snapdeal offer Amazon.in offer Amazon.com offer
  • Blogger Comments
  • Facebook Comments
  • Disqus Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Thirukural - Nalampunaindhuraiththal - Kural 1111 Rating: 5 Reviewed By: eHowToNow