We are moved to new domain
Click -> www.ehowtonow.com
Sunday, 28 May 2017

Thirukural - Patarmelindhirangal - Kural 1167

அதிகாரம் : படர்மெலிந் திரங்கல்
Adhigaram: Patarmelindhirangal
Chapter:  Complainings

இயல்: கற்பியல்
Iyal:  Karpiyal
Chapter Group: The Post-marital love

பால்: காமத்துப்பால்
Paal: Kamathupaal
Section: Love

குறள் 1167:
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

விளக்கம் : நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்

Couplet 1167:
I swim the cruel tide of love, and can no shore descry, In watches of the night, too, 'mid the waters, only I

Explanation : I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live

Transliteration : Kaamak Katumpunal Neendhik KaraikaanenYaamaththum Yaane Ulen

கலைஞர் உரை:
நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்.

மு.வரதராசனார் உரை:
காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.

சாலமன் பாப்பையா உரை:
காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.

பரிமேலழகர் உரை:
('காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்', என்றாட்குச் சொல்லியது) காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன் - காமமாகிய கடல் நீந்தாதேனல்லேன், நீந்தியும் அதற்குக் கரை காண்கின்றிலேன்; யாமத்தும் யானே உளேன் - அக்காணாமைக் காலந்தான் எல்லோரும் துயிலும் அரையிருளாயிற்று, அவ்வரை இருட்கண்ணும் அதற்கு ஒரு துணையின்றி யானேயாயினேன், ஆயும் இறந்துபட்டுய்ந்து போகாது உளனாகாநின்றேன், ஈதொரு தீவினைப்பயன் இருந்தவாறென். (கடுமை, ஈண்டு மிகுதிக்கண் நின்றது. உம்மை முன்னும் கூட்டப்பட்டது. யானே ஆயினேன் என்பது நீ துணையாயிற்றிலை என்னும் குறிப்பிற்று.)

மணக்குடவர் உரை:
காமமாகிய பெருக்காற்றினை நீந்திக் கரை காண்கின்றிலேன். அரையிருள் யாமத்தினும் உறங்காது யானேயுளேன் மற்று உறங்காதாரில்லை இதுகாதலர் குறித்தநாள் வருந்துணையும் ஆற்றுமாறு என்னையென்று தலைமகள் தன்னுள்ளே சொல்லியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காமமாகிய கடலைக் கடந்து கரையினைக் காண முடியாதவளானேன். பாதி இரவிலும் யானே துணையின்றி இருக்கின்றேன். இறவாது இருக்கின்றேன்.

Shop and help us

Flipkart Offer Snapdeal offer Amazon.in offer Amazon.com offer
  • Blogger Comments
  • Facebook Comments
  • Disqus Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Thirukural - Patarmelindhirangal - Kural 1167 Rating: 5 Reviewed By: eHowToNow